நண்டின் மருத்துவப் பயன்கள்
?நண்டில்(Crab) அதிக அளவிலான புரோட்டின்(Proteins) சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது.
?அதிக அளவிலான மினரல்ஸ்(Minerals), விட்டமின்(Vitamin) மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு(fat) இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது. மேலும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
?உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இதில் உள்ள செலீனியம் சத்து உதவுகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும்.
?இதில் உள்ள ரிபோபிளேவின்(Riboflavin) சத்து, இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டினையும் ஊக்குவிக்கிறது.
?பருக்கள்(Acne) இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க்(Zinc), எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.