சர்க்கரை நோயை குணப்படுத்தும் தொட்டாச் சிணுங்கி!! அதனை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

1327
0
Share:

தொட்டால்சிணுங்கி, பெயரைக்கேட்டாலே தெரிகிறதல்லவா, நாம் கண்ணால் காணும் உயிர்ப்புள்ள தன்மை கொண்ட தாவரம். எல்லா தாவரங்களுக்கும், மரங்களுக்கும் உயிர் உண்டு, அதனால்தான் அவை, வளர்ந்து, மலர்ந்து, காய் காய்த்து பழங்களைத் தந்து, மனிதர்களுக்கு நன்மை தருகின்றன. ஆயினும், மனிதர்களின் தொடுதலில், அல்லது சற்று பெரிய அளவில் காற்று வீசினால் கூட, இலைகளை சுருக்கிகொள்ளும் குணம் படைத்த ஒரே தாவரம், தொட்டால்சிணுங்கி மட்டும்தான்.

தொட்டால்சிணுங்கி செடி, நீர்ப்பாங்கான இடங்களில், ஆற்றங்கரை ஓரங்களில் எல்லாம் தானாக வளரக்கூடியது. மழைக் காலங்களில் தரையில் அடர்ந்து படரும் இந்தச்செடி, மிக நுண்ணிய காந்த ஆற்றல் கொண்ட தன்மைமிக்கது. மனிதர்களுக்கு உடல் பிணி மட்டுமல்லாமல், மனப்பிணியையும் போக்கும் ஆற்றல்மிக்கது.

தொட்டால்சிணுங்கி வேரை, சித்த மருத்துவத்தில் உடல்பிணி மருந்தாகவும், மாந்தரீகத்தில் மனப்பிணி தீர்க்கவும்,இன்னல்கள் களையவும் பயன்படுத்துவர். தொட்டால்சிணுங்கியின் இலை மற்றும் வேர்கள் அதிக பலனும் சக்தியும்மிக்கது.

சிறு நீர் எரிச்சல் :

தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து, தினமும் காலையில் தயிரில் கலந்து சாப்பிட்டுவர, உடல் சூடு குறையும், அதனால் ஏற்பட்ட, சிறுநீர் எரிச்சல் குணமாகும். இலைப்பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து பருகிவரவேண்டும். தொட்டால்சிணுங்கி வேரை நன்கு நசுக்கி, தண்ணீர் விட்டு காய்ச்சி, தண்ணீர் மூன்றில் ஒரு பாகமாக சுருங்கியதும், அந்த நீரை தினமும் பருகிவர, பெரியவர்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடைப்பு போன்ற வியாதிகள் குணமாகும். இதுவே, உடல் தளர்ச்சி நீக்கி, உடலுக்கு வலுவும் தரும் ஊட்டக்குடிநீராகவும் பலன் தரும்.

சர்க்கரை பாதிப்புகள் நீங்க :

தொட்டால்சிணுங்கி இலைகளை வெயிலில் உலர்த்தி, அதை அரைத்து பொடியாக்கி, அதேபோல தொட்டால்சிணுங்கி வேரையும் வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு, அரை தேக்கரண்டி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டுவர, சர்க்கரை பாதிப்புகள் விலகும். இந்தக்கலவையையே, பாலில் கலந்து வருகிவர, மூல வியாதிகள் சரியாகும்.

வீக்கம் குறைய :

வீக்கங்கள் கரைய தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து பற்று போல தடவிவர, மூட்டு வீக்கங்கள் உள்ளிட்ட வீக்கங்கள் மறையும். ஆறாத புண்களுக்கு, தொட்டால்சிணுங்கி சாற்றை இட்டு, அதன் மேல் நசுக்கிய தொட்டால்சிணுங்கி இலைகளை வைத்து கட்டிவர, புண்கள் ஆறும். ஆசனப்புண்களும் குணமாகும். பெண்மணிகளின் மார்பக வீக்கத்தையும் சரிசெய்யும் ஆற்றல்மிக்கது.

வாதம் குணமாக :

தொட்டால்சிணுங்கி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை இளஞ்சூட்டில் இடுப்பின் பின்புறம் சிறிது சிறிதாக ஊற்றிவர, இடுப்பு வலி குணமாகும். தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து, குளங்களில் கிடைக்கும் களிமண்ணுடன் சேர்த்து வாத வீக்கம் எனப்படும், மூட்டு, இடுப்பு, கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கங்களில் தடவி வர, அவை நீங்கும்.

மாத விடாய் :

தொட்டால்சிணுங்கி இலைகளை சேகரித்து, இலைகளோடு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்து அரைத்து, பெண்கள் மோரில் கலந்து பருகிவர, பெண்களுக்கு மாத விலக்கு சமயங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு போன்றவை குணமாகும்

தேமல் படை போன்றவை நீங்க :

தொட்டால்சிணுங்கி இலைச்சாறு எடுத்து, அந்தச் சாற்றை தேமல் படை மீது தடவி வர, நெடுநாட்களாக இருந்து மனதளவில் துன்பம் தந்துகொண்டிருந்த அவை எல்லாம் மறையும்.

Share:

Leave a reply