வெண்ணெயை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிறான் என்று சொல்லுவார்கள். அதுபோலத்தான் நாமும். நம்முடைய வீட்டில் உள்ள அரிசியைக் கொண்டே பலரும் ஆச்சர்யப்படும் வகையில் அழகாக முடியும்.
அதைவிட்டுவிட்டு பார்லர்(parlor), கண்ட கண்ட கெமிக்கல் க்ரீம் என காசையும் சருமத்தையும் வீணாக்கிக் கொள்கிறோம்.
ஒரு ஸ்பூன் அரிசியும் ஒரு ஸ்பூன் கசகசாவும்(poppy) ஊறவைத்து பால்(milk) கலந்து நன்கு அரைத்து முகம் மற்றும் கழுத்து கை கால் பகுதிகளில் தடவி மசாஜ் செய்து கழுவுங்கள். முகம் ப்ளீச் செய்தது போல் இருக்கும்.
பச்சிரிசி(Paccirici), கஸ்தூரி மஞ்சள், 3 பாதாம் பருப்பு(Almond) ஆகியவற்றை அரைத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுங்கள். முகம் பளிச்சென பளபளக்கும்.
தலைக்கு சீயக்காய்(Soapnut) தேய்க்கும்போது, அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரில் கலந்து தேய்த்தால் கூந்தல் பளபளக்கும்.
இப்படி அரிசி மற்றும் அரிசி வடித்த கஞ்சியை வைத்து வயிற்றை மட்டுமல்ல நம்முடைய சரும அழகையும்(Skin Beauty) நிறைவாக்கிக் கொள்ள முடியும்.