அழகு குறிப்புகள்

திராட்சையின் மருத்துவ பயன்கள்

By admin

May 20, 2019

?திராட்சை(Grapes) பழத்தில் நீர்(Water), மாவுப் பொருள்(Flour stuff), உப்பு நீர்(Salt Water) மற்றும் கொழுப்பு சத்துக்கள்(Fat nutrients) உள்ளன. இது குளிர்ச்சி தரும் பழம் ஆகும். இரத்தத்தை விருத்தி செய்ய மற்றும் பித்தத்தை தணிக்கக்கூடியது திராட்சை.

?திரட்சை பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

?கீல்வாதம், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினம் இப்பழச்சாற்றை ஒரு வேளை சாப்பிடுவது நல்லது. கல்லீரல்(Liver), மண்ணீரல்(Spleen) ஆகிய ஜீரண உறுப்புகளுக்கு திராட்சை வலிமையை தருகிறது.

?காசநோய்(TB), காமாலை(Jaundice) மற்றும் பித்த நோய்களால்(Bile disease) தாக்கப்பட்டவர்கள் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

?பித்தம் உள்ளவர்கள் இப்பழத்தை தினம் சாப்பிட்டு வந்தால் கை, கால் அரிச்சல், தலை சுற்றல் நீங்கும். திராட்சைச் சாற்றை தினமும் சாப்பிட வயிற்று வலி(Abdominal pain), மலச்சிக்கல்(Constipation) நீங்கும்.

முகம் அழகு பெறும். குடல் புண் விலகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாற்றை சாப்பிடுவது நல்லது. கண் பார்வை தெளிவடையும்.